உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்

Arun Prasath

வியாழன், 24 அக்டோபர் 2019 (15:35 IST)
உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தில் 4 வார கால அவகாசம் கோரியுள்ளது தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத நிலையில் வரும் நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில் அதற்கான பணிகளும் தொடங்கின.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் 4 வார கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடைப்பது பற்றி, இறுதி முடிவு கிடைக்கவில்லை” எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தலுக்கு தேவையான போதுமான அளவு மின்னணு இயந்திரங்கள் இல்லாததால், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களும், கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குச் சீட்டு முறையிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆணையம் கூறியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்