தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சார பணிகளில் ஈடுபட முன்னதாக காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளது. வாக்கு சேகரிப்புக்கு கூடுதல் நேரம் கிடைத்துள்ளது வேட்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.