திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, இவ்வாரத்தில் தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் விரைவில் இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.