தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு - வி.செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

திங்கள், 4 ஜூன் 2018 (20:31 IST)
தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அரசுதான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு என்று முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி பகுதியில் அரவக்குறிச்சி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய, முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, வரும் 7ஆம் தேதி கரூர் அருகே பள்ளப்பட்டி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று இப்தார் நோன்பு திறக்க உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 32 ஆண்டுகளுக்கு பின்பும் ஆளுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க ஆட்சி தான் என்று கூறிய முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அப்பேர்பட்ட இயக்கத்தினை ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு, சசிகலாவினாலும், டி.டி.வி தினகரன் அவர்களாலும் ஆட்சியை பெற்று, முதலமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது.

அதற்கு உதாரணம் தான் தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட, துப்பாக்கிச்சூடு செய்த அரசு இந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, நீட் தேர்வில் நமது தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவில்லை, கதிராமங்கலம் பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் என்பதை விட, தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சொந்த மாவட்டமான தேனியில், நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் அதை தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்ற முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, ஆனால் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், நேரில் தேனி மாவட்டத்திற்கு சென்று போராடினார்.

அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்துவதற்காக டி.டி.வி தினகரன் பாடுபட்டு வருகின்றார்.

ஆனால், தமிழகத்தின் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, பா.ஜ.க அரசின் மோடியுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கும், தமிழக மக்களின் உரிமைகளுக்கும் எதிராக செயல்பட்டு வருகின்றதையதும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் விரைவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலரும், அதற்கு டி.டி.வி ஒருவரால் தான் முடியும் என்றதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி மலரும் போது இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்க முடியும் என்றார்.

மேலும் நீட் தேர்வில் முறையான பயிற்சி கொடுக்காமல், தேர்வு நேரத்தில் தமிழகத்தில் முறையாக தேர்வு மையங்களை அமைக்காமல், வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத மாணவ, மாணவிகளை அனுப்பிய ஒரே அரசுதான் இந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, இன்று வரை அலட்சியமாக செயல்பட்டு வந்ததுதான் நீட் தேர்வின் தேர்ச்சி விகிதத்திற்கு காரணம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்