தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, சசிகலா தரப்பில் முதல்வராக நியமிக்கபட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவர் இன்னும் 15 நாட்களில் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.