தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்

சனி, 23 ஜனவரி 2021 (21:41 IST)
அமெரிக்க நாட்டின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றிருக்கிறார். அவரது தலைமையில் என்னென்ன நன்மைகள் உருவாகும் எதிர்ப்பார்த்து அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் அவரைக் கவனித்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிடன் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டபோது, அங்கு கேப்பிட்டல் பாதுகாப்புப் பணியில் ஈட்டுபட்டிருந்த வீரர்கள் சிலர் நாடாளுமன்ற உறூப்புனர்கள் சென்ர பிறகு கேப்பிட்டல் கட்டடத்திற்கு அருகில் உள்ள அண்டர்கிரவுண்ட் கார் பார்கிங்கில் படுத்து தூங்குவதுபோல் புகைப்படங்கள் வைரலானது.

கழிப்பறை வசதிகள் அங்கு இல்லாதபோதிலும் அவர்கள் அங்கிருந்த செய்தி பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது.

இதுகுறித்து அதிபர் பிடன் பாதுகாப்பு வீரர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் நேஷனல் கார்டு பீரோ தலைவரை நேரில் வரவழைத்து, மன்னிப்புக் கேட்டதுடன் வீரர்க்ளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும்படி கூறியுள்ளார். அதிபரின் செயல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்