ஸ்வீட்டும் கையுமாய் திரியும் ஈபிஎஸ் ஆட்கள்... அப்போ இவரு தானோ???

புதன், 7 அக்டோபர் 2020 (08:36 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 

 
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் இடைக்க உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற பின்னர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகம்  வாழை மரம் கட்டப்பட்டு, வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டு, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு  உள்ளது. விடிய விடிய நடந்த அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை ஈபிஎஸ் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. 
 
இதனால் கொஞ்சம் குஷியாக இருக்கு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் இதனை கொண்டாட பட்டாசு, ஸ்வீட் ஆகியவற்றுடன் ரெடியாக காத்துக்கிடக்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்