முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி: ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு!

வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:24 IST)
தமிழகத்தில் நிலவி வந்த பெரும் குழப்பத்தை ஆளுநர் ஒரு வழியாக இன்று முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.


 
 
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி உருவாகியது. இதனால் கடும் போட்டி நிலவியது. சசிகலா சிறைக்கு செல்லவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக சசி அணியால் அறிவிக்கப்பட்டார்.
 
எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் தொடர்ந்து காலம் தாமதித்து வந்தார்.
 
இந்நிலையில் இன்று ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு ஆளுநரை சந்தித்தார் அவர். அவருடன் மூத்த அமைச்சர்கள் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சென்றனர்.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவரது எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் அணி தாங்கள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க தயார் என ஆளுநரிடம் கூறியிருந்ததால் 15 நாட்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்