கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் மூவர் பலி.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (18:02 IST)
நேற்றைய சுதந்திர தின விடுமுறை நாளில் திருநெல்வேலியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் கடலில் குளிக்க சென்ற போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இறந்த மூன்று மாணவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
 
திருநெல்வேலி, ராதாபுரம் தொகுதி, நாவலடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ராகுல், எட்டாம் வகுப்பு படிக்கும் முகேஷ் ஆகிய மூவரும் 15.8.2023 அன்று கடலில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி இறந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன். பலியான மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மகன்களை இழந்து தவிக்கும் மூவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்