இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட் செல்லும் எடப்பாடி.. ஓபிஎஸ் என்ன செய்வார்?
சனி, 21 ஜனவரி 2023 (12:27 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக தற்போது ஓபிஎஸ் பிரிவு இபிஎஸ் பிரிவு என இரண்டு பிரிவுகளாக இருப்பதை அடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் அல்லது முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கேட்க தனக்கு முழு உரிமை இருப்பதாகவும் தற்போதும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்வதாகவும் ஓ பன்னீர் சொல்லும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர் பயன்படுத்த தற்காலிக அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ஏற்கனவே அதிமுக பொது குழு குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தீர்ப்பு வருவதற்கு முன்னால் இடைக்கால நிவாரணம் தேட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.