தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும். இந்த கூட்டத் தொடரில் ஆளுனர் வாசித்த உரையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுதல், 15 நாட்களில் குடும்ப அட்டை போன்ற பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆளுனர் உரை குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “ஆளுனர் உரையில் அரசின் முற்போக்கு திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு கூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை; ஆனால் அதற்கு மாறாக குழுவை அமைத்துள்ளதாக கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.