பினராயி விஜயனை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி – நதிநீர்ப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை !

புதன், 25 செப்டம்பர் 2019 (14:07 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசவுள்ளார்.



தமிழகம் மற்றும் கேரளா அகிய இரு மாநிலங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் முல்லை பெரியாறு, பரம்பிகுளம் – ஆழியாறு ஆகிய நதிநீர் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளா சென்றுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு மாநில முதல்வர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.  முதல்வருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளனர்.

நதிநீர் பிரச்சனை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துப் பேசுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்