மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதில், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செந்தில் பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் என பலரும் அடக்கம்.
குறிப்பாக கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் ஒரு மேடையில் பேசியது இப்போது வரைக்கும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சுந்திரதினம் டிசம்பர் 15 என ஸ்டாலின் பேசியதும் வைரலானது.