அந்நிய செல்வாணி மோசடி: அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

செவ்வாய், 4 ஜூலை 2023 (13:30 IST)
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்நிய செலவாணி மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அந்நிய செலவாணி மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அமொ; அம்பானிக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதனை அடுத்து நேற்று அவர் ஆஜரான நிலையில் அவரிடம் எட்டு மணி நேரம் விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். 
 
மேலும் அனில் அம்பானி மனைவி டீனா அம்பானி இன்று அமலாக்கத்துறை அதிகாரி முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார் என்றும் அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 2020 ஆம் ஆண்டில் ஏற்கனவே அமலாக்கத்துறை அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்