செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை: என்.ஆர்.இளங்கோ

செவ்வாய், 27 ஜூன் 2023 (11:25 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் செய்து வருகிறார்.
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் செய்து வருகிறார். அவரது வாதத்தில் பல முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
கஸ்டம்ஸ் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், என்.டி.பி.எஸ் சட்டங்களில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஆனால், அமலாக்கத்துறைக்கு நாடாளுமன்றம் அப்படி எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றமே வழங்காத ஒரு அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்றும், சட்டவிரோத கைது என்பதை மனதில் கொள்ளாமல் முதன்மை அமர்வு நீதிபதி, நீதிமன்ற காவல் வழங்கியுள்ளார் என்றும் அவர் தனது வாதத்தில் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்