'விஸ்வாசம்' படம் மூலம் விழிப்புணர்ச்சி பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையம்

புதன், 17 ஏப்ரல் 2019 (21:44 IST)
சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற '49P' காட்சிகளை வைத்து தேர்தல் ஆணையம்  விழிப்புணர்வு விளம்பரம் செய்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் விஜய் படத்தை அடுத்து தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்தை வைத்து தேர்தல் ஆணையம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் "வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது!  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.
 
ஏற்கனவே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோக்களில் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து பல முன்னணி நடிகர்கள் நடித்த விளம்பரங்கள் வைரலானது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அஜித், விஜய் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் விளம்பரத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர்களது படங்கள் தேர்தல் ஆணையத்திற்கு உதவியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது! #MakeYourMarkTN #GoVoteTN #ECI #LokSabhaElections2019 #Viswasam @directorsiva @SureshChandraa pic.twitter.com/pfIMwujvvL

— TN Elections CEO (@TNelectionsCEO) April 17, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்