வீடுகளில் ஏசி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணமா? மின்சார ஆணையம் விளக்கம்

செவ்வாய், 2 மே 2023 (07:46 IST)
தமிழகத்தில் உள்ள வீடுகளில் ஏசி, வாட்டர் ஹீட்டர் ஆகியவை பயன்படுத்தினால் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் இது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 
 
தமிழகத்தில் மின்சாதன பயன்பாட்டை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது என்றும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஏசி வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவை கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களிலேயே தகவல் தவறானது 
 
அவ்வாறு எந்த தேவை கட்டணமும் விதிக்கும் நடவடிக்கை இல்லை என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது முத்துக்குளி
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்