ஊட்டி, கொடைக்கானல் செல்ல இனிமேல் இ பாஸ் எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Mahendran

திங்கள், 29 ஏப்ரல் 2024 (20:17 IST)
ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கோடை காலம் என்பதால் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் ஊட்டி கொடைக்கானலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாவை அனுபவிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவஸ்தையில் இருப்பதாகவும் மற்ற நகரங்களில் இருப்பது போலவே ஊட்டி கொடைக்கானலில் நெருக்கடி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இனிமேல் இ பாஸ் எடுக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்