திமுக பொது செயலாளராக பதவி வகித்து வந்த க.அன்பழகன் உடல்நல குறைவால் காலமானார். அதை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் பதவி காலியானது. அடுத்த பொது செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற பேச்சு எழுந்த நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினரான துரைமுருகன்தான் அந்த பதவியை பெறுவார் என பேசிக்கொள்ளப்பட்டது.
இந்த இரண்டு பதவிகளுக்குமான தேர்தல் மார்ச் 29ம் தேதி நடைபெறும் என கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது செயலாளர் பதவி துரைமுருகனுக்குதான் கிடைக்கும் என முடிவாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதுதவிர பொருளாளர் பதவிக்கு மூன்று முக்கிய நபர்கள் காய் நகர்த்தி வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.