தமிழ்வழி படித்தவர்களுக்கு அரசு வேலை! – தமிழக அரசு மசோதா தாக்கல்!

திங்கள், 16 மார்ச் 2020 (09:31 IST)
தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முக்கியத்துவம் அளிப்பதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் ஆகிறது.

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தமிழக சட்டசபை மீண்டும் தொடங்குகிறது. இதில் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ள மற்றும் செய்யப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுத்தவிர முக்கியமாக தமிழ்வழி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முக்கியத்துவம் அளிப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த மசோதாவின் படி தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆனால் மாணவர்கள் தங்கள் கல்லூரி படிப்பை மட்டும் தமிழ்வழியில் பயின்று இருக்காமல் 10 மற்றும் 12ம் வகுப்புகளிலும் தமிழ்வழி கல்வியை பயின்று இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்