அவருக்கு ஏற்கனவே தோள் வலி கடுமையாக இருந்துள்ளது இதனையடுத்து திடீரென தலைசுற்று ஏற்பட மயங்கிவிட்டார் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. திவிர சிகிச்சையில் உள்ள அவரை பார்க்க முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அப்பல்லோ வந்துள்ளனர்.
ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அதிமுகவினர் கூட்டம் உள்ளது. தற்போது முக்கிய திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் அங்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அப்பல்லோ வளாகம் அரசியல் கட்சியினரால் திணறி வருகிறது.