பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 9 முறை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானத்தை இயற்றியவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமான நிலையத்துக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவரும் போராட்டத்தில் பங்கேற்று இருந்தார்.
இந்நிலையில், நேற்று திடீரென அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் பரந்தூர் விமான நிலையம் அமைவது காரணமாக திவ்யா மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரணம் அடைந்தவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.