கனமழை எதிரொலியால் தென்மாவட்ட ரயில்கள் ரத்து! பேருந்து சேவையும் நிறுத்தம்!

திங்கள், 18 டிசம்பர் 2023 (07:41 IST)
நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதை அடுத்து ஒரு சில தென்மாவட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்செந்தூர் ரயில்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

அதேபோல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் கனமழையால் நெல்லை - திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாகவும், தொடர் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முத்துநகர் மற்றும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியில் உள்ளனர். மேலும் தொடர் கனமழை காரணமாக நெல்லை - தென்காசி இடையேயான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்