தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.