விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடந்த போது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் பங்கேற்றனர். தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படாது தான் இதற்கு காரணம் என்று பாமக கூறியிருந்தது. அந்தத் தவறு இப்போது சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!
தமிழக அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்!