ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்: கோவை மாணவி தற்கொலை குறித்து டாக்டர் ராமதாஸ்!

சனி, 13 நவம்பர் 2021 (13:59 IST)
கோவை மாணவி தற்கொலை விவகாரம் ஆசிரியர்கள் அதற்கு அவமானம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
 
ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்
 
ஓடந்துறை ஊராட்சியில் 0.35 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டத்தை செயல்படுத்தியதால் அக்கிராமம் மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி மிச்சமாகும் 2 லட்சம் யூனிட் மின்சாரத்தை விற்பதால் ரூ.5 லட்சம் வரை வருமானமும் கிடைக்கிறது. மற்ற ஊராட்சிகளும் இதை பின்பற்றலாமே?
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்