இந்த இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை மணிப்பூர் மாநில போலீஸார் வெளியிட்டனர். அதன்பின்னர், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு 11 நாட்கள் போலீஸார் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பற்றி இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: எங்கே போனார்கள் அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன், மக்கள் செல்வன், சீயான், நற்பணி நாயகன், சின்ன ரஜினி, மறந்தும்கூட உங்கள் குடும்பத்தாருடன் படப்பிடிப்புக்காக மணிப்பூர் மாநிலம் சென்றுவிடாதீர்கள் இதுவே என் எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.