சமீபத்தில் கூட நிஷ்டை மையம் என்கிற நிறுவனத்தை தொடங்கி, வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்ய இலவச பயிற்சி என அறிவித்த ஹீலர் பாஸ்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதேபோல், திருப்பூரில் யூடியூப்பை பார்த்து பிரசவம் செய்த பெண், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
மேலும், தேனியில் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன், தொப்புள் கொடியை அறுக்கவே கூடாது என அதிகாரிகளிடம் சண்டையிட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்லு வெளக்காதீங்க என ஒரு கும்பல் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக ஒட்டப்பட்ட போஸ்டரில் “ சர்க்கரை முதல் கேன்சர் வரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற பல்லு வெளக்காதீங்க” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மருத்துவ பயிலரங்கம் ஈரோட்டில் நடை பெறுவதாகவும், அதற்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.