மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? கல்லா..? அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்.!

Senthil Velan

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (16:01 IST)
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என  அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 
 
வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பிசி அவர்,  கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பேரிடராக மத்திய அரசு அறிவிக்காதது ஏன் ன்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

மேலும் மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் அளித்த அவர்,  நானும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவர் என நினைத்திருந்தேன் என்றும் ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போது தான் தெரிகிறது என்றும் கூறினார்.

ALSO READ: வன்முறையால் பற்றி எரியும் வங்கதேசம்.! பிரதமர் ஹசீனா தலைமறைவு.! இந்தியாவில் தஞ்சமா.?
 
விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது என  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்