ரஜினிக்கு நூல் விடும் பிரேமலதா? சப்போர்டுக்கு காரணம் என்ன??

வெள்ளி, 13 மார்ச் 2020 (13:35 IST)
ரஜினிகாந்த் அரசியல் குறித்த தனது தெளிவான முடிவை சொல்லிவிட்டார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவாக பேசியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இளைஞர்கள், மக்கள் மத்தியில் எழுச்சி உருவாக வேண்டும். அரசியலில் புரட்சி ஏற்பட்டு மாற்றம் நிகழும். அப்படி ஒரு மாற்றம் ஏற்படும்போது நான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார். அதோடு தனது அரசியல் திட்டங்களையும் விளக்கினார். 
 
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ரஜினியின் கருத்தௌ வரவேற்றுள்ளார். ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்திற்கும், எங்களது குடும்பத்திற்கு அவர்மேல் ஒரு மரியாதை உண்டு. 
ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். வருகிற தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும். நிச்சயம் மாபெரும் ஒரு மாற்றம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட என்று கூறினார்.
 
தற்போது அதிமுக மீது எம்பி சீட் கொடுக்காததால் அதிருப்தியில் உள்ள தேமுதிக, தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி வைக்க காய் நகர்த்துகிறதா என பேசப்படுகிறது. விஜயகாந்த் முதலமைச்சர் ஆவர் என பிரேமலதா கூறுவதும், தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என ரஜினி கூறிவதும் ஒத்துப்போவது போலவே தோன்றுகிறது. 
 
அதேபோல, ரஜினி நேற்றைய பேட்டியில் அதிமுகவை விமர்சித்ததை பற்றி கண்டுக்கொள்ளவே இல்லை பிரேமலதா. என்னதான் திட்டங்களை விளக்கினாலும் ரஜினி இன்னும் கட்சி துவங்கவில்லை. எனவே, ரஜினியின் கையிலே அனைத்தும் உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்