பாலியல் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி செல்போனில் விமான பணிப்பெண்கள் புகைப்படங்கள்: அதிர்ச்சி தகவல்..!

Mahendran

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (11:51 IST)
டெல்லியில், ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி, என்கிற பார்த்தசாரதி, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மொபைல் போனை ஆராய்ந்ததில், பல பெண்களுடன் பேசிய ஆபாசமான உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 
விசாரணையில், சாமியார் தனது மொபைலில் பல விமான பணிப்பெண்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்களையும், ஸ்கிரீன்ஷாட்களையும் சேமித்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு அவரது இரண்டு பெண் உதவியாளர்களும் உடந்தையாக இருந்ததால், அவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
 
முன்னதாக, இவர் மாணவர்களை மிரட்டி, ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட 17-க்கும் மேற்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலங்களுக்கு பிறகு, கடந்த 50 நாட்களாக தலைமறைவாக இருந்த சைதன்யானந்த, இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
 
விசாரணையில் அவர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், உறுதியான ஆதாரங்களை காட்டும் போது மட்டுமே பதிலளிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் தூதர் என்று போலியான விசிட்டிங் கார்டுகளையும் அவர் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்