கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு சுவாச தொற்று அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதற்கு நிமோனியா நோய் தொற்று உள்ளதா என்பதை அடையாளம் காண ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகம் தாக்கி வருவதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், ஒரு குழந்தைக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், எருமை, சளி ஆகியிருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாச பிரச்சனை மற்றும் அதற்கான அறிகுறிகள் இருந்தால், குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த விஷயத்தில் பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.