ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 1995 ஆம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது வழங்கப்பட்டது.
அந்த விழாவில் அரசு அதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதா வருவதற்கு முன்பே, விருது பெறும் சிவாஜியை மேடையில் அமரவைத்துவிட்டு, பின், எல்லோரையும் முதல்வர் வரும்போது எழுந்து நிற்க சொல்லி, அந்த செவாலியர் விருது வழங்கும் விழாவை தமிழக அரசின் விருது வழங்கும் விழா போல நடத்தினர். இதனால், திரையுலக பிரமுகர்கள் கடுப்பானார்கள். அப்போது, பேசிய ரஜினிகாந்த், மேடையிலேயே தைரியமாக ஜெயலலிதாவை குற்றம் சாட்டினார். அங்கே ஆரம்பித்தது, ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இடையே முதல் சண்டை.