போலீஸை அசிங்கமாய் திட்டிய பெண் பிரமுகர்: ஸ்டாலினின் நடவடிக்கை என்ன?

செவ்வாய், 18 டிசம்பர் 2018 (18:06 IST)
கடந்த 16 ஆம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்னா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வந்திருந்தனர். 
 
சிலை திறப்பு விழாவை தொடர்ந்து பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைப்பெற்றது. சோனியா, ராகுல் உச்சகட்ட எஸ்பிஜி பாதுகாப்பில் உள்ளதால் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
 
அப்போது விஐபி பகுதிக்கு தாமதமாக வந்த பெண் பிரமுகர் ஒருவர் நிக்ழச்சிக்கான அழைப்பிதழை காட்டி உள்ளே விடுமாறு கேட்டார். ஆனால், போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்ட துவங்கினார். 
 
பிரச்சினையை விடுங்கள் என ஒரு காவலர் கூற, பிரச்சினையை விட்டு விடுகிறோம். காவல்துறை தன் கடமையைச் செய்யவேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அராஜகம் எல்லாம் என்கிட்ட வைத்துக்கொள்ளாதீர்கள். அதெல்லாம் ஜெயலலிதா, சசிகலாவோடு முடிந்து போச்சு தெரியுமா? என பிரச்சனையை வளர்த்துக்கொண்டே போகிறார். 
தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், போலீஸாரை தரகுறைவாக பேசியதால் அந்த பெண் பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இதற்கு முன்னர் பிரியாணி கடை, டீ கடை ஆகிய இடங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் பிரசனை செய்த போது திமுக தலைவர் ஸ்டாலின் அதற்காக வருந்தியதோடு, கடும் நடவடிக்கைகளையும் எடுத்தார். இது போன்று இந்த விஷயத்திலும் ஸ்டாலின் ஏதேனும் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்