தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும்- அமைச்சர் டிஆர்பி.ராஜா!

J.Durai

திங்கள், 3 ஜூன் 2024 (14:51 IST)
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்  தலைமையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் டிஆர்பி.ராஜா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 
 
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர்  டிஆர்பி ராஜா செய்தியாளர்   சந்திப்பின் போது பேசியது .....
 
40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும் டிஆர்பி ராஜா அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒட்டுமொத்த தமிழகம் கலைஞரை கொண்டாடி வருகிறது.
 
கலைஞரின் திருவுருவ படத்திற்கு  மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் கலைஞர் அவர்கள் தான். 
 
ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர்  அவர்கள். இன்றைய நாளில் அவரை  கொண்டாடி வருகிறோம்.
முதலமைச்சர  தமிழகத்திற்கு மூன்றே ஆண்டுகளில்  மகத்தான சாதனைகள், மகத்தான நலத்திட்டங்களை பொது மக்களுக்கு,தாய்மார்களுக்கு, இளைஞர்களுக்கு அற்புதமான நலத்திட்டங்களை கொடுத்து வருகிறார்.
மகத்தான வெற்றியை நாளை நாற்பது தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும்.இதனை மக்கள் கொடுப்பார்கள்.
 
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மகத்தான வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் செய்து காட்டுவார்.
 
பல மடங்கு திட்டம்  அற்புதமான செய்து காட்டுவார். கோவைக்கு தேர்தல் வாக்குறுதி செய்தது போல, மிகப் பெரிய வளர்ச்சி,  சிறு குறு தொழில்களில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும் என தெரிவித்தார்.
 
இந்த சந்திப்பின்போது, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி,  மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் எஸ்எம்.முருகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி மற்றும் வார்டு செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்