சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு: திடீர் பல்டி ஏன்?

சனி, 2 ஜூன் 2018 (19:55 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் போட்டி சட்டசபையை அண்ணா அறிவாலயத்திலும் நடத்தினார். ஆனால் இந்த போட்டி சட்டசபைக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. முக்கிய கூட்டணி கட்சிகளே இந்த போட்டி சட்டசபையில் கலந்து கொள்ளவில்லை
 
மேலும் ஒரு எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்திற்கு செல்லும் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையை புறக்கணிப்பது தவறான முடிவு என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் வலியுறுத்தினர். மேலும் தோழமை கட்சிகளும் சட்டப்பேரைவைக்கு மீண்டும் திமுக எம்.எல்.ஏக்கள் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்து இன்று கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த மு.க.ஸ்டாலின், 'வரும் திங்கள்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க திமுக முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். ஸ்டாலினின் இந்த முடிவை கூட்டணி கட்சியின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்