கருணாஸ் பின்னணியில் திமுக: அம்பலமானதா உண்மை?

புதன், 3 அக்டோபர் 2018 (15:59 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த வழக்கு, ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு என இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள கருணாஸ்.
 
ஆனால், கருணாஸை மீண்டும் கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஆம், நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் நெல்லையில் தேவர் அமைப்பு ஒன்றின் நிர்வாகியின் கார் எரிக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய முயற்சித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 
 
இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கருணாஸ் பின்னணியில் திமுக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து ஜெ.அன்பழகன் கூறியது பின்வருமாறு, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சபாநாயகருக்கு அதிகாரமில்லை என தீர்ப்பு வந்தால் கருணாஸை நீக்க முடியாது.
 
சபாநாயகர் அவசரப்பட்டு கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. சபாநாயகரை நீக்குவது தொடர்பாக சட்டசபை கூடும்போது திமுக பரிசீலிக்கும். மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்