இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மட்டுமின்றி திமுகவில் உள்ள பலர் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சாலையில் போவோர் வருவோர்களிடம் எல்லாம் கையெழுத்தைப் பெற்று வருகின்றனர். இதனையடுத்து சென்னையில் சில பெண் திமுக பெண் தொண்டர்கள் பலரிடம் கையெழுத்து பெற்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞரிடம் அவர்கள் கையெழுத்து கேட்கும்போது குடியிருப்பு சட்டம் என்றால் என்ன? அதனால் யாருக்கு பாதிப்பு? என்ன பாதிப்பு? என அடுக்கடுக்காக கேள்வியைக் கேட்டார்
அந்த கேள்விகளுக்கு அந்தப் பெண்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் சதீஷ் என்பவரை அழைத்து வந்தனர். இளைஞர் கேட்ட கேள்விக்கு அவருக்கும் பதில் தெரியவில்லை. இதிலிருந்து இந்த கையெழுத்து எதற்காக வாங்குகிறார்கள்? என்ன திட்டத்திற்காக வாங்குகிறார்கள் என்பது கூட தெரியாமல் அந்த பெண் தொண்டர்கள் கையெழுத்து வாங்கியது தெரியவந்தது
இதேபோல் சிலருக்கு உணவு பொட்டலங்களை கொடுத்தும் கையெழுத்து வாங்குவதாகவும் திமுக தொண்டர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உண்மையாகவே குடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இருந்தால் அந்த பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி கையெழுத்து வாங்க வேண்டிய கையெழுத்து இயக்கம், அந்த சட்டம் குறித்து ஒன்றுமே தெரியாதவர்களை கையெழுத்து வாங்க சொல்லியிருப்பதால் பரிதாபமான காட்சிகளை நடந்தேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது