ஒடிசா முதல்வரின் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின் சதி: பிரதமர் மோடி அதிர்ச்சி தகவல்..!

Mahendran

புதன், 29 மே 2024 (16:38 IST)
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னால் சதி இருக்கலாம் என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஓராண்டாக நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர் என்றும், திரை மறைவில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலரது லாபி இதில் அடங்கி இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது என்றும் பிரதமர் மோடி பேசினார்.
 
மேலும் ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.
 
ஒடிஷாவில் உள்ள பூரி ஜெகந்நாத் கோயிலின் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாக வி.கே.பாண்டியனைக் குறிவைத்து குற்றச்சாட்டை பகிரங்கமாக பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் கூறிய நிலையில் தற்போது ஒடிசா முதல்வரின் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்  சதி இருக்கலாம் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்