முடிவுக்கு வந்தது திமுக-காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு: இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

ஞாயிறு, 7 மார்ச் 2021 (07:37 IST)
முடிவுக்கு வந்தது திமுக-காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு:
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த முக்கிய கட்சிகளில் ஒன்றாகிய காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. காங்கிரஸ் கட்சி 40 முதல் 50 தொகுதிகள் வரை கேட்டதாகவும், ஆனால் திமுகவை 15 முதல் 20 தொகுதிகள் வரை மட்டுமே திமுக தர தயாராக இருந்ததாகவும் கூறப்பட்டு வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது 
 
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது 
 
அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகளும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
இது குறித்த ஒப்பந்தத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகிய இருவரும் கையெழுத்திடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்