மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்

Mahendran

செவ்வாய், 19 மார்ச் 2024 (07:41 IST)
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாக உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள், தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக திமுக கூட்டணியில் படு சுறுசுறுப்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது மற்றும் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து அறிவிப்பும் வெளியாகிவிட்டது என்பதும் வரும் 22 ஆம் தேதி முதல்வர் தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின்  சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக 21 தொகுதிகளில், காங்கிரஸ் 10 தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் மற்றும் சிபிஐ தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை தற்போது பார்ப்போம்.

திமுக :

✦ வட சென்னை
✦ தென் சென்னை
✦ மத்திய சென்னை
✦  ஸ்ரீபெரும்புதூர்                                                                                
✦ அரக்கோணம்
✦ காஞ்சிபுரம்
✦ திருவண்ணாமலை
✦ வேலூர்
✦ தரமபுரி
✦ கள்ளக்குறிச்சி
✦ சேலம்
✦ பொள்ளாச்சி
✦ நீலகிரி
✦ கோவை
✦ தேனி
✦ ஆரணி
✦ பெரம்பலூர்
✦ ஈரோடு
✦ தஞ்சை
✦ தென்காசி
✦ தூத்துக்குடி

காங்கிரஸ் :
✦ திருவள்ளூர் (தனி) (காங்)
✦ கடலூர் (காங்)
✦ மயிலாடுதுறை (காங்)
✦ சிவகங்கை (காங்)
✦ திருநெல்வேலி (காங்)
✦ கிருஷ்ணகிரி (காங்)
✦ கரூர் (காங்)
✦ விருதுநகர் (காங்)
✦ கன்னியாகுமரி (காங்)
✦ புதுச்சேரி (காங்)

விசிக :
✦ சிதம்பரம் (விசிக)
✦ விழுப்புரம் (விசிக)

சிபி.எம் :
✦ மதுரை (சிபிஎம்)
✦ திண்டுக்கல் (சிபிஎம்)

சிபி.ஐ :
✦ திருப்பூர் (சிபிஐ)
✦ நாகப்பட்டினம் (சிபிஐ)

✦ நாமக்கல் (கொமதேக)
✦ திருச்சி (மதிமுக)
✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்)

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்