இந்த நிலையில் தற்போது பத்து தொகுதிகள் பெற்றும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக வைக்கும் நிபந்தனைகளில் ஒன்று கரூர், கிருஷ்ணகிரி, ஆரணி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியிட கூடாது என்றும் அவ்வாறு வேட்பாளரை மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டால் அந்த தொகுதியை திமுகவுக்கு கொடுத்து விடுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது
இதனால் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடலாம் என்று ஆசையில் இருந்த ஜோதிமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திருநாவுக்கரசு போட்டியிட்ட திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு தாரை பார்க்க திமுக முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து அவரை சமாதானப்படுத்திய காங்கிரஸ், தேனி தொகுதியில்; போட்டியிடுங்கள் என்று கூறிய போது தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார், அவர் எதிர்த்து போட்டியிடு வெற்றி பெறுவது கஷ்டம் என்று தனது தெரிவித்து வருகிறாராம்.