வள்ளுவரை வைத்து அரசியல் செய்வதா? விஜயகாந்த் வேதனை

புதன், 6 நவம்பர் 2019 (15:05 IST)
திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
பிள்ளையார்ப்பட்டியில் மர்ம ஆசாமிகளால் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற கருத்து பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது.
 
பிள்ளையார்ப்பட்டியில் சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பல கட்சி தலைவர்களும் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதோடு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்