தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுதாய் இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் ஏறத்தாழ கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இருந்து விலகியது. அதை தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்தது..
ஆனால் அதற்குள்ளாக தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அமமுக – தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதிலும் சரியான உடன்பாடு ஏற்படாததாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக தொகுதி வாரியாக வேட்பாளர்கள் குறித்து கலந்தாலோசனை செய்து வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.