மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் இடம்பெற்ற தேமுதிக கம்மியான சீட்களை வாங்கி போட்டியிட்டது. அது அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி விஜயகாந்த் கட்டுப்பாட்டை விட்டு அவரது மனைவி மற்றும் மைத்துனர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.