சசிகலா சிறை செல்ல தினகரனே காரணம்: திவாகரன் தாக்கு!

வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:10 IST)
டிடிவி தினகரன் தனது பேராசையால் அதிமுக என்கிற கட்சியை துண்டு துண்டாக்கி விட்டார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டி தீர்த்து வருகின்றனர்.
 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் திவாகரன் பற்றி தெரிவித்த கருத்துகள், தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சசிகலா சிறை செல்ல தினகரந்தான் காரணம் என திவாகரன் குற்றம்சாட்டி உள்ளார். 
சமீபத்தில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் பின்வருமாறு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சசிகலா சிறைக்கு செல்ல தினகரனே காரணம். மேலும், அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே நாங்கள் செயல்படுவோம். 
 
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. அத்துடன் தினகரனின் முதல்வர் கனவு நிச்சயம் பலிக்காது; இன்னும் 6 மாதத்தில் தினகரன் தனி மரமாக நிற்பார் என திவாகரன் தெரிவித்தார்.
 
திவாகரன் மகன் ஜெயானந்தும் தம்முடைய பேஸ்புக்கில் தினகரன் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்தினரிடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்