ஆர்கே நகர் தேர்தலில் சசிகலாவின் புகைப்படத்தையும், அவரது பெயரையும் முற்றிலுமாக புறக்கணித்தார் தினகரன். இந்நிலையில் அவரும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். மேலும் அவர் மீதான பெரா வழக்கு தீர்ப்பும் வர இருக்கிறது.
இந்நிலையில் நிலையான தலைமையில்லாமல் அதிமுக உள்ளதால் இளவரசியின் மகன் விவேக்கை அதிமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆதரவை கட்சியில் பெற விவேக் முயற்சி செய்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இதற்கு திவாகரன் தரப்பு கடுமையான ஆட்சேபனையை சசிகலாவிடம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. தினகரனுக்கு பதவி கொடுத்து அவர் ஆட்டம் போட்டது போல, தேவையில்லாமல் விவேக்கையும் வளர்த்துவிட வேண்டாம் எனவும், தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி ஆட்சி தொடரட்டும் என திவாகரன் சசிகலாவுக்கு காட்டமாக தகவல் சொல்லி அனுப்பியதாக தகவல்கள் வருகின்றன.