இயக்குனர் மோகன் ஜி கைதா? பஞ்சாமிர்தம் குறித்த் சர்ச்சை கருத்து..!

Mahendran

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (10:41 IST)
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து இருப்பதாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றிய இயக்குனர் மோகன் ஜி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்சையானது.

இதனை அடுத்து இயக்குனர் மோகன் ஜி சற்று முன் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கைது குறித்து அறிவிப்பை இன்னும் காவல்துறை வெளியிடவில்லை என்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது

சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது.

அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது.” என கூறியுள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்