கி ராமசுப்பு என்பவர் ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை, கோவை, மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புகளில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகவில்லை என்றும் தினமலர் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் திரு R. சத்தியமூர்த்தி கடந்த 23 வருடங்களாக இந்த இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும் "தினமலர்" பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்றும் தினமலரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.