தினகரன் கட்சி உதிர்ந்துகொண்டு வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன் ’கிண்டல்’

புதன், 10 ஜூலை 2019 (14:03 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமான அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொல்லி  சசிகலா, தினகரன் தரப்பினர் நிர்பந்தித்தனர். அவரும் பதவியை ராஜினாமா செய்தார். இது தமிழ்நாட்டில் பெரும் பரபரபாக பேசப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தினகரன் கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்ட  முதல்வர்  பதவி கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பன்னீசெல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். இந்தப் பரபரப்புகளுக்கிடையே ஊழல் வழக்கில் சசிகலா - இளவரசி - ஜெயலலிதாவுக்கு (மறைந்த பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு ) சிறைதண்டனை வழங்கப்பட்டது.
 
பின்னர் எடப்பாடியும் தினகரனுக்கு எதிராகத் திரும்ப... அவர் பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்துக்கொண்டு, தினகரன் - சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கினர்.
 
தன் தன்மானத்துக்கு இழுகு வராமல் கடந்தவருடம் அதிமுகவுக்குப் போட்டியாய், உண்மையான அம்மாவின் கட்சித் தொண்டர்களின் ஆதரவில் அம்மாவின் ஆசிர்வாதத்தில் அமமுக கட்சி தொடங்குவதாகக் கூறி, அக்கட்சியை தொடர்ந்து நடத்திவந்த நிலையில் ஆர். கே நகர் இடைத்தேர்தலில் ஜெயித்த தினகரனால் அண்மையில் நடைபெற்ற மக்களைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கமுடியவில்லை. 
 
இந்நிலையில் பல முக்கிய பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகினர். சமீபத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகினார்.
 
தொடர்ந்து அமமுக கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடன் கூறியது ;
 
’தினகரன் ஆதரவு நாளேட்டில் பாஜக குறித்து சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. தினகரன் கட்சி முழுமையாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது’ இவ்வாறு தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்